• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கூடலூரில் காட்டு யானை தாக்கியதில் மீண்டும் ஒருவர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் காட்டு யானைகள் புலிகள் சிறுத்தைகள் கரடி என பல காட்டு விலங்குகள் வசிக்கும் பகுதியாகும் மேலும் முதுமலை புலிகள் காப்பகம் ஒட்டி உள்ள பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படும்,
இந்நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் தேவர் சோலை அருகே உள்ள செம்பக் குழி பகுதி அருகே உள்ள சிறுமுள்ளி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினரான கரியன் என்பவரது மகன் குட்டன் (49) என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளதாக கூறப்படுகிறது


தகவல் அறிந்த தேவர் சோலை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் இறந்த குட்டணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது