• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை

ByA.Tamilselvan

Mar 5, 2023

ஆன்லைன்ரம்மியால் பலர் தற்கொலை செய்துகொண்டநிலையில் சென்னை சேர்ந்த மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகர், 14-வது செக்டார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). நேற்று முன்தினம் மாலை வெளியே சென்ற சுரேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ராதா, வீட்டில் இருந்த கணவரின் செல்போனை ஆய்வு செய்தார். அப்போது அதில் “ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துவிட்டேன், நான் வாழ தகுதியற்றவன். எனவே தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்” என கடிதம் எழுதி அதை செல்போனில் படம் பிடித்து வைத்து இருப்பது தெரிந்தது. இந்நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சுரேஷ் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சுரேஷின் உடல் மெரினா கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. சுரேஷின் உடலை கைப்பற்றி கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.