• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நித்யானந்தா சிலைகளுக்கு அபிஷேகம்- உண்மையில் என்னதான் பிரச்சனை?

ByA.Tamilselvan

Jun 11, 2022

கடந்த சில நாட்களாகவே நித்யானந்தா குறித்து பல்வேறுதகவல்கள் வந்த உள்ளன.சமீபத்திய அவரது புகைப்படங்களை பார்க்கும் போது அவருக்குஎதோ உடல் நலக்கோளாறு எனத்தெரிகிறது.அவர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும் எனவே அவரது சொத்துக்களுக்கு முக்கிய சீடர்களுக்குள் போட்டி நடப்பதாகவும் தகவல்கள் வந்தன.
சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவரது உடலில் என்ன பாதிப்பு என்று இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. சமீபத்தில் அவர் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆழ்ந்த சமாதி நிலையில் இருந்து விரைவில் உடலில் குடியேறி சத்சங்க உரையாற்றுவேன் என கூறி இருந்தார்.
இந்நிலையில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நித்யானந்தாவை போன்ற தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைலாசாவில் நடந்த இந்த பூஜைகள் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை இதுவரை இல்லாத நிலையில், நித்யானந்தாவின் தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பது அவர் ஜீவசமாதி ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
ஆனால் இந்த தகவல்களை அவரது தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நித்யானந்தா தரப்பினர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- கைலாசாவில் உள்ள நித்யனந்தேஸ்வர கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது. சித்ரா நட்சத்திரம் என்பது பூமியில் ஸ்ரீபரம்ம சமாரின் செயல்பாடுகளை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் பூஜை. இது இந்து மதத்தின் உச்ச கடவுளின் நட்சத்திரம் ஆகும். அவர் தான் எல்லோருக்கும் கடவுள் என்பதால் அவரை வணங்க வேண்டும். அதன்படியே கைலாசாவில் அவரின் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறு பூஜை செய்யப்பட்டது. அவருக்கு இந்த நல்ல நாளில் எங்களின் மரியாதை வழங்கப்பட்டது என பதிவிட்டுள்ளனர்.
ஆனால்நித்யானந்தாவின் உடலுக்கு என்ன நோய் என்றோ, என்னதான் பிரச்சனை என்றோ இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை.