• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணியினர் போட்டியிடவில்லை என அறிவிப்பு

Byவிஷா

Mar 15, 2024

விரைவில் மக்களவைத்தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இணைந்திருக்கும் ஓபிஎஸ் அணியினர் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளனர். சென்னையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் அணியினர் இதுகுறித்து அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர் செல்வம் கூறி வந்த நிலையில், தற்போது திடீரென இந்த முடிவை எடுத்துள்ளார். பாஜக தாமரை சின்னத்தில் போட்டியிட நிர்பந்திப்பதால் தேர்தலில் இருந்து ஓபிஎஸ் அணி விலகுவதாக கூறப்படுகிறது.