• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாளை குமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Byவிஷா

Dec 23, 2024

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாளை (டிச 24) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளான டிசம்பர் 24ம் தேதி செவ்வாய் கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
(2) 24.12.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 டிசம்பர் திங்கள் நான்காவது சனிக்கிழமை (28.12.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
(3) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 24.12.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.