• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

முழு விவரம்:
முதற் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 10ஆம் தேதி
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 14ஆம் தேதி
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 20ஆம் தேதி
நான்காம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 23ஆம் தேதி
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 27ஆம் தேதி
ஆறாம் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 3
கடைசி கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 7
பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மணிப்பூரை பொறுத்தவரை வாக்குப்பதிவு மார்ச் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

முக்கிய தகவல்கள்:
• ஐந்து மாநிலங்களில் மொத்தம் 690 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.
• வேட்பு மனுக்களை இணையத்தில் தாக்கல் செய்யலாம்.
• ஐந்து மாநிலங்களில் 18.34 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர்.
• வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
• வரும் ஜனவரி 15 வரை, பேரணிகளுக்கு அனுமதி இல்லை.
• கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தபாம் மூலம் வாக்களிக்கலாம்.
• இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரசாரத்திற்கு தடை.