சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் மதிப்பிற்குரிய பால்வளத்துறை அமைச்சர் டீ. மனோ தங்கராஜ் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாழ்த்துரை வழங்கினார்.
மேலும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்
Dr. C. கிறிஸ்துதாஸ், J. செல்வம், Dr. N. விஜயன், K.ரசலையன் ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு சமூக, அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

குமரி சமூகத்தினரின் நலனுக்காக செயல்பட்ட தலைவர்களை பாராட்டுவதோடு, எதிர்கால சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்களும் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள், தலைவர்களின் உரைகளுக்கு உற்சாகமாக வரவேற்பு தந்து விழாவை சிறப்பித்தனர்.






; ?>)
; ?>)
; ?>)
