• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சித்திரை திருவிழாவில் அன்னதானத்தை
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்!

Byகாயத்ரி

May 11, 2022

சிவகாசி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக நடைபெற்ற அன்னதானத்தை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்
சிவகாசி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடக்கும் விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அக்னிசட்டி, கயர்குத்து, முடிகாணிக்கை, முத்து காணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை காணிக்கை என நேர்த்திகடன் செலுத்தி பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். அம்மனுக்கு பொங்கல் வைத்தும் சிறப்பு வழிபாடு செய்தனர். பொங்கலையொட்டி சிவகாசியில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. பட்டாசு, தீப்பெட்டி, அச்சு உள்ளிட்ட அனைத்து ஆலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சிவகாசி, திருத்தங்கல் மட்டுமல்லாது சுற்றுகிராமத்தினரும் கலந்து கொண்டனர்.சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, மண்டல் செயலாளர்கள் கிருஷ்ணமூாத்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாம் (எ) ராஜா அபினேஷ்வரன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், முன்னாள் நகர செயலாளர் அசன்பதூரூதீன், மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்டச் செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், தலைமை கழக பேச்சாளர் சின்னத்தம்பி, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை 25வது வட்ட கழக செயலாளர் பாலமுருகன் சிறப்பாக செய்திருந்தார்.