பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பில், வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தை திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கொரியர் கணேசன். மு.காளிதாஸ், அரியூர் ராதாகிருஷ்ணன், எம். வி. பி. ராஜா, யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, பேரூர் செயலாளர்கள் அழகுராஜா, முருகேசன், வி. கே. குமார், மகளிர் அணி லட்சுமி, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி பேரூர் அவைத்தலைவர் பரமசிவம், பேரூர் துணைத் தலைவர் சந்தானதுரை, எம். ஜி. ஆர் மன்ற செயலாளர் முத்துகண்ணன், பேரூர் அம்மா பேரவை செயலாளர் தனசேகரன் கச்சை கட்டி ரவி ஒன்றிய அவைத் தலைவர் ஆர். எஸ். ராமசாமி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர். பி. உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன் திருப்பதி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம் தமிழரசன், எஸ். எஸ். சரவணன் அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல்துரை தன் ராஜன், இளைஞர் அணி கவிகாசிமாயன் விவசாய பிரிவு செயலாளர் ஆர். எஸ். ஆர். ராம்குமார், வாவிடமருதூர்குமார் தகவல் தொழில்நுட்ப அணி சிங்கராஜ் பாண்டியன், இலக்கிய அணி ரகு, பாசறை மாவட்ட இனை செயலாளர் மு. க. மணிமாறன், கோட்டைமேடு பாலா, தென்கரை நாகமணி, மகளிர் அணி வனிதா ஜோதி, வழக்கறிஞர் அணி குருவித்துறை காசிநாதன், இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணி, அண்ணா தொழிற்சங்கம் சக்திவேல், சின்னன், பாண்டி, ராமச்சந்திரன், மதன்குமார், ஜெகதீசன், பாண்டி, மன்னாடிமங்கலம் ராஜபாண்டி, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஜெயச்சந்திர மணியன், கூட்டுறவு சங்க துணைதலைவர் முடுவார் பட்டி முத்துக்கிருஷ்ணன், அலங்காநல்லூர் ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் மதன், சத்திர வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், கல்லணை எஸ்.கே. ராஜா உள்பட அதிமுகவினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
