• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலையின் பேட்டியே சீட்டிங் தான்- தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

ByA.Tamilselvan

Apr 14, 2023

அண்ணாமலையின் பேட்டியே சீட்டிங் தான். அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று முக்கிய தி.மு.க. பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். இதுகுறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசும் போது…:- ஏதேனும் ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட அண்ணாமலை சொல்லவில்லை. அனைவரின் நேரத்தையும் அண்ணாமலை வீணடித்துள்ளார். அண்ணாமலையின் அறியாமையை பார்த்தால் ஐபிஎஸ் எப்படி ஆனார் என சந்தேகம் வருகிறது. அண்ணாமலை பட்டியல் வெளியிட்ட 12பேரும் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வார்கள். தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால் சாதாரண குடிமகன் கூட வழக்கு தொடரலாம். அண்ணாமலையின் பேட்டியே சீட்டிங் தான். அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை. அண்ணாமலை தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வார். திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைவிட அண்ணாமலை பெரும் தலைவர் இல்லை. ரூ.1,408 கோடி சொத்தை 15 நாட்களுக்குள் அண்ணா அறிவாலயத்தில் அண்ணாமலை ஒப்படைக்க வேண்டும். ஆருத்ரா முறைகேட்டில் ரூ.84 கோடியை அண்ணாமலை பெற்றுள்ளார். திமுகவினர் எதற்கும் பயப்படமாட்டார்கள். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.