தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெறும் வாய்ச்சவடால் விடுபவர் தான். அவர் பேசுவதை அவரே வாபஸ் வாங்கி கொள்வார். திமுகவை யாராலும் ஆட்டவோ அசைக்கவும் முடியாது. நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேட்டி.
சமூக நலன் மட்டும் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று நாகர்கோவில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார்.
அப்போது அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறும்போது..,
தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் 15 தினங்களுக்குள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருதி தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளை வெளியே சொல்ல தயக்கம் காட்டி வந்த நிலையில் புகார் அளிப்பதற்காகவே இலவச எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை மறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். இந்த விழிப்புணர்வை நிறுத்தி விடலாமோ என்று அளவிற்கு புகார்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழக முதல்வர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். பெண்கள் மட்டும் குழந்தைகள் கைபேசியை கவனமுடன் கையாள வேண்டும் என தெரிவித்த அவர், தெரிந்த நபர்களால் தான் குழந்தைகள் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பாஜக தலைவர் அண்ணாமலை பெரும் வாய்ச்சவடால் தான். சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு பின்னர் வாபஸ் வாங்கி செல்வார். ஆனால் திமுகவினர் அப்படி அல்ல, சொன்னால் சொன்னதை செய்வோம் அதுதான் திமுக அரசு என தெரிவித்தார். திமுகவை அளிப்பேன் என்று சொன்னவர்கள் அழிந்ததாக தான் வரலாறு. சமுதாயத்தில் அனைவரும் படிப்பது ஒருவருக்கு ஒருவர் சமமாக இருப்பது, பெண்கள் சட்டமன்ற உறுப்பினராக ஆவது அனைத்தும் திமுகவால் தான் என தெரிவித்தார்.