தமிழக பா.ஜ.க., முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரில் “ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றம்” என்ற பெயரில் ஆண்டிப்பட்டியின் பல்வேறு இடங்களில் பாஜக தொண்டர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

அந்த போஸ்டரில் மன்றத்தில் உறுப்பினராக சேர்வதற்கு அழைப்பும் விடுத்து அதற்கான மொபைல் நம்பரும் கொடுத்துள்ளனர்.
மேலும் அந்த போஸ்டரில் தமிழ்நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார், மக்கள் தலைவர் அண்ணாமலை தலைமை ரசிகர் சமூக சேவை நற்பணி மன்றம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து பாஜக நிர்வாகிகளிடம் கேட்டபோது அண்ணாமலை மீதுள்ள தனிப்பட்ட விருப்பத்தால் இந்த மன்றத்தை துவக்கி உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஒரு அரசியல் கட்சி தலைவர் பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கிய சம்பவம் ஆண்டிப்பட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.