• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முதல்வரின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடுமுதல்வரின் 70 வது பிறந்த நாளையொட்டி சூரமங்கலம் பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திடலில் ஏழை எளிய தாய்மார்களுக்கு இலவச சேலை, அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை திமுக நிர்வாகிகள் வழங்கினர்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாள் விழா தமிழக முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரம் சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட ஜங்ஷன் ரயில் நிலையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திடலில் ஏழை எளிய தாய்மார்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை தாய்மார்களுக்கு இலவச சேலையும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடினர். ஜங்ஷன் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநகராட்சி துணை மேயர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.