• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கங்கைகொண்ட சோழபுரத்தில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா

ByA.Tamilselvan

Nov 8, 2022

உலக புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம்  ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகமானது.  வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் வருடத்திற்கு முன் ராஜேந்திர சோழன்  தஞ்சாவூர் பெரிய கோவில் வடிவமைப்புடன் கூடிய. பிரகதீஸ்வரர் கோவிலை கட்டினார். இக்கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 16.5 அடி உயரமும். 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் தான் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என போற்றி வணங்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா சபையின் யுனஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. கங்கை கொண்ட சோழபுரம் பிரகன்நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில். கடந்த 38 வருடத்திற்கு முன் காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஐப்பசி பௌர்ணமியில் அன்னா அபிஷேகத்தை தொடங்கினார்.
அதன்பிறகு காஞ்சி மடத்து பக்தர்களால் தொடர்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்று வருகின்றது. இரண்டு தினங்களுக்கு முன் கணபதி ஹோமத்துடன், கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும்,  தொடர்ந்து நேற்று முன்தினம் பிரகதீஸ்வரர், பிரகன்நாயகி, மகஷாசுரமர்த்தினி, சண்டிகேஸ்வரர், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் உள்ள நவக்கிரகம்  மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும், மகா அபிஷேகமும் நடைபெற்றது.நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு காலை முதல் சுமார்  100 சிப்பம் 2500 கிலோ பச்சரிசியைக்கொண்டு. கோவில் வளாகத்தில் சமைத்து, பிரகதீஸ்வரருக்கு சாத்தி தொன்றுதொட்டு செய்வதைப் போல் 51 வகையான பழங்கள், வில்லவ  இலை  உட்பட 21வகை இலைகளால், 51வகை பூக்களால் அலங்கரித்து. (சந்த்ரோதயா காலத்தில்)  மாலை 6 மணியளவில்.  மகா தீபாராதனையும் அதையடுத்து ஸ்ரீ சுத்ஹம்,ருத்ர சுத்ஹம், 4 வேதங்கள், திருவாசகம் பெரியபுராணம் உட்பட நால்வரின் பாடல்கள் பாடப்பட்டு,சிவனின் ஐந்து முகத்திற்கும், ஒரே நேரத்தில்,ஐந்து அடுக்கு தீபங்கள்   காட்டப்பட்டன.டி ஐ ஜி சரவணா சுந்தர். எம்எல்ஏ கண்ணன் உட்பட ஆயிரக்கணக்கான சாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி பவுர்ணமி அன்று சிவ ஸ்தலத்திற்கு சென்று வழிபடுவது (பாவவிமோசனம்), புண்ணியம் ,அதைவிட சிவலிங்கத்திற்கு அன்னம் சாத்தப்பட்டு. ஒவ்வொரு சாதத்து பருக்கையும் சிவ அம்சம் பெற்று. சிவஸ்வரூபமாக மாறுவதால். அன்று அன்னாபிஷேகத்தை தரிசிப்பது. கைலாயம் சென்று தரிசிப்பதற்கு, ஈடானதும். கோடி சிவஸ்தலத்திற்கு சென்று தரிசிக்கும் ,புண்ணியம் கிடைக்கும் என்பதால், தரிசனம் செய்தனர். அன்னாபிஷேகம் முடிந்து இரவு 8 மணிக்கு மேல் அன்னாபிஷேக சாதத்தை பக்தர்களுக்கு விநியோகித்துவிட்டு. சகல ஜீவராசிகளுக்கும் சிவ அருள் கிடைக்க. ஏரிக்குளங்களில் உள்ள உயிரினங்க்ள். மறுபிறவி இல்லாமல் சிவ முக்தி பெற ஏரி, மற்றும் குளங்களிலும், பூமிக்குள் இருக்கும் உயிரினங்களுக்காக, குழிதோண்டி புதைக்கப்பட்டும், பூமியில் வாழும் மிருகங்கள்,பறவைகள், கறையான்கள் உட்பட உயிரினங்களுக்கு வயல்வெளிகளில் மற்றும் திறந்த வெளியில் இரைத்தும் அன்னாபிஷேக சாதம் வினியோகித்தனர்.