• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிட

ஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.இப்படத்தில் புதுமுக கதாநாயகனாக மாறன் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பழம்பெரும் நடிகரான ஜெஸ்டினின் பேத்தியான ‘ஹரிஷா ஜெஸ்டின்’ நடிக்கிறார். மேலும் ஜெய் பாபு , லோகேஷ், அதிரடி அரசு மற்றும் பபிதா ஜெஸ்டின் என்று பல முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்க உள்ளனர்.கதை, திரைக்கதை, வசனம் – மாறன், இயக்கம் – M.ஸ்ரீதர், ஒளிப்பதிவு – A .T.ஜாய், இசை – டாக்டர் செல்லையா பாண்டியன், பாடல்கள் – தொல்காப்பியன், மாறன், படத் தொகுப்பு – லெனின் சந்திரசேகர், நடன இயக்கம் – பவர் சிவா, சண்டை இயக்கம் – காட்டு ராஜா, கலை இயக்கம் – ராமலிங்கம், பத்திரிகை தொடர்பு – செல்வரகு.
இது ஒரு வித்தியாசமான ஆக்க்ஷன் திரில்லர் படம். தாய், தந்தை மேல் பாசமும், தன்னை சுற்றி இருப்பவர்களின் மேல் அன்பும் வைத்திருந்த இளைஞன் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தாய் தந்தையரை நயவஞ்சகமாக கொன்றவர்களை பழி வாங்கும் கதைதான் இந்தப் படம். இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி, ஓசூர், மைசூர், பெங்களூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.