• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பகுதியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா..!

ByKalamegam Viswanathan

Jan 11, 2024

சோழவந்தான் அரசு பஸ் டிப்போ எதிரி உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் சோழவந்தான் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து அனுமனை தரிசித்து கோவிலில் சனிவாரம் அமாவாசை பௌர்ணமி உட்பட ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
ஆஞ்சநேயர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்று பால் தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு அலங்காரம் நடைபெற்று அர்ச்சகர் புருஷோத்தமன் என்ற மூர்த்தி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். இக்கோவில் தக்கார் முன்னாள் சேர்மன் எம். கே. முருகேசன், ராமகிருஷ்ணன், மருது, பரமசிவம், வெற்றிவேல்மாரி உட்பட அனுமன் பக்தர்கள் குழு அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாடுகளை செய்தனர். சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏறப்பாடுகளை செய்திருந்தனர்.
இதே போல் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும், திரௌபதி அம்மன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும், இரட்டை அக்கிரகாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.