• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சோமேட்டோவிலிருந்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த அனிரூத்..

Byகாயத்ரி

Jul 2, 2022

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். இவர் இசையமைப்பில் இந்த ஆண்டு வெளியான விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், கமலின் விக்ரம் என அனைத்து படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. இதுதவிர தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம், அஜித்தின் ஏகே 62, ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.

இசையமைப்பாளர் அனிருத் படங்களுக்கு மட்டுமல்லாமல் சில விளம்பரங்களுக்கும் இசையமைத்துள்ளார். அந்த வகையில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோவுக்காக அனிருத் இசையமைத்திருந்த ‘சும்மா செம்ம சோமேட்டோ’ என்கிற பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பாடல் மிகவும் பிடித்திருந்தது. இந்நிலையில், இப்பாடல் யூடியூபில் 78 லட்சம் பார்வைகளை பெற்றதற்காக அனிருத் சோமேட்டோ நிறுவனத்திடம் ட்ரீட் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் சோமேட்டோ நிறுவனத்துடன் டுவிட்டரில் சாட் செய்துள்ளார். அதன் ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் படு வைரல் ஆகிறது. அந்த உரையாடலில் எப்போ ட்ரீட் குடுக்க போறீங்க” என்று அனிருத் கேட்க சோமேட்டோ நிறுவனம் ப்ரோவுக்கு இல்லாமையா? சொல்லுங்க நான் இப்போ என்ன பண்ணனும்? என்று ஜாலியாக ட்வீட் செய்துகொண்டனர். அதில் 100 சுவாரஸ்யமான பதில் அனுப்புபவர்களுக்கு இலவசமா ட்ரீட்.. சோமேட்டோ ஓகே தான? என பதிவிட, இதற்கு பதிலளித்த சோமேட்டோ, இந்த டுவிஸ்ட நாங்க எதிர்பாக்கல ப்ரோ! இருந்தாலும் ஆரம்பிக்கலாமா? என பதிவிட்டிருந்தது.

அனிருத், சோமேட்டோ இடையேயான இந்த உரையாடலை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு சுவாரஸ்யமான பதில்களை அளித்து வருகின்றனர்.