தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் – பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான டி.சுப்புலாபுரம், கோத்தலூத்து, சண்முகசுந்தரபுரம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளிலுள்ள 11 பணிகளுக்கு நடைபெறவிருந்த இன்றைய டெண்டர் திமுக ஒப்பந்ததாரர்கள் டெண்டருக்கு வராத காரணத்தால் ஆண்டிபட்டி ஒன்றிய நிர்வாகம் சார்பாக நிர்வாக காரணம் என்று கூறி திடீரென மாலை 6 மணிக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அறைக்கு முன்பாக டெண்டர் ஒத்திவைப்பதாக நோட்டீஸ் ஒட்டி ஒத்தி வைத்ததால் -டெண்டர் எடுப்பதற்காக நீண்ட நேரமாக காத்திருந்த அதிமுக கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் குற்றசாட்டுகின்றனர்.

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக திமுக ஒப்பந்ததாரர்கள் வராத காரணத்தால் ஆளும் திமுக அரசிற்கு ஆதரவாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் செயல்படும் விதமாக டெண்டரை ஒத்தி வைப்பதாக குற்றம் சாட்டியும் அதிமுக ஒப்பந்ததாரர்களுக்கு முறையாக ஒப்பந்தம் வழங்காமல் காலம் தாழ்த்தும் நோக்கிலும் செயல்படுவதாக குற்றம்சாட்டியும் இதனால் கடன் வாங்கி டெண்டருக்கான முன்பணம் செலுத்தியும் டெண்டர் எடுக்க முடியாமல் ஏமாற்றமடைவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் ஆத்திரத்தில் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அதிமுக ஒப்பந்ததாரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.








