புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அங்கன்வாடி, அங்காடி, பயணியர் நிழற்குடை, புதிய நூலகம் திறப்பு விழா என 3 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதேபோல் கறம்பக்குடி ஒன்றியத்தில் மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி சிறப்பித்தார். உடன் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விலையில்லா மடிக்கணினி வழங்க விழாவில் அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கும் டிப்ளமோ நர்சிங் மாணவர்களுக்கும் அரசு மட்டுமல்ல தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் வழங்கியிருப்பதாகவும் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, சட்டக் கல்லூரி, கால்நடை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் படிக்கின்ற மாணவச் செல்வங்களுக்கு மனிதநேயத்தோடு டிஜிட்டல் இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணிக்கின்ற இந்த தேசத்தில் 10 லட்சம் மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி சாதனை படைத்த தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் என்று புகழாரம் சூட்டி தமிழ்நாட்டின் தலை சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புகழாரம் சூட்டினார்.






