• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பழமையான சுடுமண் பெண் தெய்வ சிலை கண்டெடுப்பு!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தொல்லியல் களமான பட்டினமருதூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் தெய்வ சிலை கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து, தூத்துக்குடியைச் சேர்ந்த வரலாறு, தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது: தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொல்லியல் களமாக தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரின் சுமார் 300ஏக்கர் பரப்பளவு பகுதியில் நேற்று ஊர்மக்கள் வாயிலாக கண்டெடுக்கப்பட்ட சிறிய  அளவிலான 5.4செ.மீ உயரம் கொண்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் உருவத்தின் நெஞ்சு மார்பு பகுதி வரையிலான இரு கரங்கள் இல்லாத சிதைவு மிகுந்த அழகான ஆபரண கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன், சிரசில் அழகிய கொண்டையுடன் காணப்படுகிறது. 

எங்கள் ஒப்பீடு ஆய்வின் படி இதன்  முழு உருவம் 17 -18 செ.மீ(7″) உயரம் கொண்டதாக இருந்திருக்கலாம் என்பதும், இதன் உருவ அமைப்பு நம் ஐம்பெரும் காப்பியங்களில் குறிப்பிடப்படும் நமது தாய் தெய்வமான சம்பாபதி அம்மன் ஆலய சதுக்க பூதம் போன்று தென்படுகிறது. ஏற்கனவே இதே போன்ற இரண்டு வேறு அமைப்பு கொண்ட பெண் தெய்வம் போன்ற சுடுமண் சிற்பங்கள் பட்டினமருதூரில் கண்டெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பதும்,இதேபோன்ற சில சுடுமண் சிற்பங்கள் பூம்புகார், கீழடி போன்ற பகுதிகளில் கிடைக்கப்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மக்கள் ஒப்படைத்த சிறிய கருப்பு நிற சாய்வு முக்கோண வடிவம் மற்றும் வழுவழுப்பான  3.2செ.மீ அகலம் கொண்ட  வாய்ச்சி(Adze) என சீவகசிந்தாமணியில் (2825, 2689) குறிப்பிடப்படும் மரம், செங்கல் செதுக்கப் பயன்படுத்தப்பட்ட
மேலும் மக்கள் ஒப்படைத்த சிறிய கருப்பு நிற சாய்வு முக்கோண வடிவம் மற்றும் வழுவழுப்பான  3.2செ.மீ அகலம் கொண்ட  வாய்ச்சி(Adze) என சீவகசிந்தாமணியில் (2825, 2689) குறிப்பிடப்படும் மரம், செங்கல் செதுக்கப் பயன்படுத்தப்பட்ட தொன்மையான மற்றும் கடினமான கல்லில்(இயற்கை/ செயற்கை) செய்யப்பட்ட ‘வாய்ச்சி’ ஆயுதத்தின் பக்கவாட்டில் காணப்படும் 9.0மி.மீ நீளம் கொண்ட மிக நுட்பமான ஒற்றை மீன் சின்னமானது இரட்டை ‘நீண்ட கொம்புகள் கொண்ட பசுமீன்(Longhorn cowfish)’ போன்று உள்ளது என்பதும், 

அடிப்பக்கம் காணப்படும் நான்கு எழுத்துக்களில் இரண்டாம் சங்ககால தொல் தமிழ் எழுத்தான ‘ய’ வினை நான்காவது எழுத்தாக உள்ளடக்கி, தமிழி(பிராமி) மற்றும் மீள் வட்டெழுத்து ஆகியவையும் கலந்து ‘குல புயங்கம்(ன்)’ என பொருள் வருவது போல் உள்ளது என்பதும், இந்த கருவியின் காலகட்டம் மற்றும் ஒற்றை கொம்புகள் உள்ள பசுமீன் சின்னங்களை பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முறையான கரிம வேதியியல் ஆய்வு செய்திட நம் பாண்டியர்கள் வரலாற்றின் இருண்ட காலம் தொடர்பான இருள் விலகிட முக்கிய விளக்காக விளங்கி நமக்கு வழிகாட்டுவது திண்ணம். இது தொடர்பாக மாவட்ட தொல்லியல் துறையின் பொறுப்பு அதிகாரியிடம் தகவல்கள் பரிமாறப்பட்டது. அவர் கூறுகையில் இவைகள் முக்கிய ஆதாரமாக விளங்கும் தன்மை கொண்டது என்றும் நமது பட்டினம் மருதூர் தொடர்பான அகழாய்வு பணிக்கான ஒப்புதல் மத்திய தொல்லியல் குழுவினர் வாயிலாக வழங்கப்பட்டு விடும் எனவே அவர்கள் வெகு விரைவில் களம் கண்டு இதுவரை கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களையும் கணக்கில் கொள்வோம் என்றார்.

எனவே இந்த மழைக்காலம் முடியும் தருவாயில் நமது தென்மதுரை (ரா) என நாங்கள் கருதும் தருவைக்குளம் – பட்டினமருதூர பகுதியில் பிரபஞ்சத்தின் கருணையால் ஆரம்பம் ஆகி நம்மை வெளிவரும் தொல்லியல் எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்கள் வாயிலாக ஆச்சரியம் அடைய செய்து உலகிற்கு தமிழர்களின் கலாச்சார மேம்பாடு உண்மை உலகுணர செய்வது திண்ணம் என்று தெரிவித்தார்.”