• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் முதன் முறையாக சினிமா ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக சேர்வதற்கான ஒர் அறிய வாய்ப்பு..!

Byஜெ.துரை

Sep 23, 2023

நன்கு ஸ்டண்ட் பயிற்சி கலை தெரிந்த வெளி நபர்களுக்கு தமிழகத்தில் முதன் முறையாக ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக சேர்வதற்கு ஒரு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்பானது இனி பத்து வருடங்களுக்கு ஒரு முறை தான் நடை பெற உள்ளது.

இதற்கான தேர்வு அக்டோபர்(2023)மாதம் முதல் நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பம் 21.09.2023 முதல் வழங்க பட இருக்கிறது.

மேலும், இதில் உறுப்பினராக இணைய தேவையான தகுதிகள் 1.5.5அடி உயரம் இருக்க வேண்டும்.

குறைந்த பட்ச கல்வி தகுதியாக பத்தாம் வகுப்புக்குமேல் படித்திருக்க வேண்டும்.

கார், பைக் நன்கு ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

நீச்சல் பயிற்சி, ஜிம்னாஸ்டிக், சிலம்பம், வால் பயிற்சி போன்ற தனித்திறமைகள் இருக்க வேண்டும்.

அது மட்டுமின்றி தற்சமயம் குடியிருக்கும் முகவரியின் அருகே உள்ள காவல் நிலையத்தில் அவர் பெயரில் எந்த ஒரு குற்ற செயலும் பதிவாக வில்லை என்ற சான்றிதழ் ( NOC) பெற வேண்டும்.

இந்த தகுதி மற்றும் ஆவணங்கள் இருந்தால் யூனியனில் தங்களை இணைத்து கொள்ளலாம் என்று சங்கத்தின் தலைவர் தவசிராஜ் அறிவித்துள்ளார்.

இந்த அதிகார பூர்வ அறிவிப்பின் போது செயலாளர் வி.மணிகண்டன் மற்றும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.