• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை

ByKalamegam Viswanathan

Jan 11, 2025

சோழவந்தான் திருவேடகம் அருகே வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் காலனி வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவேடகம் காலனியைச் சேர்ந்தவர் சின்ன காளை அவரது மனைவி பாப்பாத்தி வயது 80. இவர் நேற்று இரவு அவரது ஊரான திருவேடகம் காலனி வைகை ஆற்றில் இரண்டு காதுகள் அறுக்கப்பட்டும் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சோழவந்தான் போலீசார் அவரது உடலை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பாப்பாத்தியின் காதுகள் அறுக்கப்பட்டு இருப்பதால் இவர் அணிந்திருந்த தங்கத்தோடுகளை திருடி செல்லும் நோக்கில் இந்த படுகொலை நடந்ததா அல்லது வேறு காரணங்களுக்காக கொலை செய்துவிட்டு போலீசாரின் கவனத்தை திசை திருப்ப காதுகளை அறுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படுகொலை குறித்து, போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு அழுகிய நிலையில் ஒருவர் பிணமாக இதே வைகை ஆற்றில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.