கடை கடையாய் பிஸ்கட் வியாபாரம் செய்யும் மூதாட்டி குறுக்கே நாய் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மதுரை தெற்கு ஆவணி மூல வீதி நகைக்கடை பஜார் பகுதியில் மூதாட்டி ஒருவர் கடைக்கு சென்று பிஸ்கட் வியாபாரம் செய்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது மீனாட்சி அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது நாய் ஒன்று வேகமாக குறுக்கே ஓடியது. அப்பொழுது மூதாட்டி மீது மோதியதில் மூதாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவரது கால் எலும்பு இரண்டாக நொறுங்கியது. ரத்தம் ஆறாக ஊத்தியது. இதைக் கண்ட பகுதி மக்கள் உடனடியாக 108 அவசர கால உறுதிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த 108 அவசரகால ஊர்தி செவிலியர்கள் முதலுதவி அளித்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது நாய் மோதி கால் எலும்பு முறிவு ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

