• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் கீழே விழுந்து இறந்த முதியவர்.., வீட்டின் ஓட்டை உடைத்து இரண்டு நாட்களுக்குப் பின் மீட்பு..!

ByKalamegam Viswanathan

Apr 4, 2023

வீட்டின் குளியல் அறை அருகே கீழே விழுந்து மரணம் அடைந்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பின் வீட்டின் ஓட்டை உடைத்து, அவரது உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 72). இவர் மதுரை கோச்சடையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு திருமணமாகவில்லை. பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இவரும் மற்றும் இவரது சகோதரிகள் வசித்து வந்துள்ளார்கள் வயது மூப்பு காரணமாக சகோதரிகள் இறந்து விடவே இவர் மட்டும் தனிமையில் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்தாரா அல்லது மாரடைப்பு ஏற்பட்டதா என தெரியவில்லை, தினசரி அனுப்புவார் கடந்த இரண்டு நாட்களாக அனுப்பவில்லை சந்தேகப்பட்ட உறவினர்கள் தொலைபேசி மூலமாகவும் அழைத்தும் எந்தவித அழைப்பும் ஏற்காததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள், உறவினரின் நண்பரை விட்டு வீட்டில் போய் பார்க்க சொல்லி இருக்கின்றனர். வீடு உள்புறம் பூட்டி இருப்பதை பார்த்து கதவை தட்டி உள்ளார்கள் அப்பொழுதும் கதவு திறக்காததைக் கண்டு சந்தேகமடைந்த உறவினரின் நண்பர் மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர், சுப்பிரமணியபுரம் காவல் காவல்துறையினர் உதவியுடன் வீட்டின் முன் பகுதியில் உள்ள ஓட்டை உடைந்து உள்புறம் பூட்டப்பட்டிருந்த கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த பொழுது குளியல் அறை அருகே உயிரிழந்து இருந்தார். உடனே, ரவியின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுப்ரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.