• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சபரிமலையில் உழவாரப்பணியாற்ற பக்தர்களுக்கு அழைப்பு

ByA.Tamilselvan

Jan 8, 2023

ஸ்ரீ சபரிமலை சபரி பாட்டி உழவாரப்பணி சார்பாக சபரிமலையில் உழவாரப்பணியாற்ற குருசாமி மற்றும் ஒருகிணைபை்பாளர் எம். ராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மகரபூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் மகரபூஜையை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ சபரிமலை சபரி பாட்டி உழாவாரப்பணி பேரவை சார்பாக உழாவாரப்பணி நடைபெற உள்ளது.

இதற்கு விருப்பமுள்ளவர்கள் பங்கேற்குமாறு குருசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் எம். ராஜேந்திரன் அழைுப்பு விடுத்துள்ளார். சபரிமலையில் நடைபெறும் மண்டலபூஜை நடைபெறும் 10 ம் தேதி தொடர்ந்து 18,19,20,21 ஆகிய தேதிகளில் ஸ்ரீ சபரிமலை சபரி பாட்டி உழாவாரப்பணி பேரவை சார்பாக சபரிமலையில் உழவாரப்பணி நடைபெறுகிறது. எரிமேனி, பம்பா, சபரிமலை சன்னதானம், ராணிப்பெருநாடு, பந்தளம் ஆகிய இடங்களில் உழவாரப்பணி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் குருசாமி- ஒருங்கிணைப்பாளர் எம். ராஜேந்திரனை 98428 04915, 90428 04915 ஆகிய எண்களில் அழைக்கலாம். உழவாரப்பணி மேற்கொள்ளும் சேவார்த்திகளுக்கு குருதி பூஜா,புஷ்பாஞ்சலி படிபூஜை , திருவாபரணம் தரிசனம், பந்தளம் மஹாராஜா தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று எம். ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.