நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகரத்தில் அதிமுக சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி தலைமையில் நடைபெற்றது.
புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது பேசிய குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி..,
சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றை ஆண்டு காலம் தான் என்ற நிலையில் இன்று அதிமுக நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. நமது கட்சி செயற்குழு கூட்டத்தின் செய்தி வெளியே செல்லக்கூடாது என்று எண்ணிக்கொண்டு திமுகவும் இன்றைய நாளிலேயே திமுகவின் நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து பேசுகையில் மூன்றை ஆண்டு காலத்தில் 2-கோடி பெண்கள் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1கோடியே 13 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் மாதம் 1000 ரூபாய் கொடுத்துவிட்டு மீதியை தகுதி இல்லை என்று ஒதுக்கி வைத்துள்ளனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பச்சைக் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1500 ரூபாய் எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றார்.
மேலும் இன்று சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பேசுகையில் மூன்று மாத காலமாக ரேஷனில் பருப்பு இல்லை, எண்ணெய் இல்லை, என்று சொல்ல அதிமுக சார்பில் அதற்காகவே ஒரு தீர்மானம் போட்டு இருக்கின்றோம் ரேஷன் கடையிலே முறையாக மாதம்தோறும் அரிசி, பருப்பு, எண்ணெய், வழங்க வேண்டும் என்று, திமுகவை பொருத்தவரை நாங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டோம் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என்று மம்மதியில் இருக்கிறார்கள்.

மக்கள் ஆயிரம் ரூபாய் வாங்கினார்கள் என்று சொன்னால் இன்று கூடுதலாக இன்னும் ஆயிரம் ரூபாய் செலவாகின்ற நிலைமை தான் தற்போது நடைபெறுகிறது.
குமாரபாளையம் தொகுதி பள்ளிபாளையத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக ஓரு டாஸ்மாக் கடை கூட இல்லாமல் வைத்திருந்தேன் ஆனால் இன்று வீதிக்கு வீதி டாஸ்மாக் கடை, தெருவுக்குத் தெரு சந்து கடை, அதுமட்டுமல்ல அதைவிட ஒரு மோசமான கலாச்சாரம் இப்பொழுது பரவிக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளியில் படிக்கிறவர்கள் இருந்தாலும் சரி கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் என்றாலும் சரி, அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலமை உருவாகி உள்ளது. போதைப் பொருள் என்பது எளிதாக நடமாடக்கூடிய பகுதியாக இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது. ஆண்கள் சம்பாதிப்பதில் டாஸ்மாக் கடைக்கே செலவிடுகிறார்கள்.
வீட்டில் இருக்கக்கூடிய 15 வயது குழந்தைகள் கூட வீட்டில் காசு கொடுக்கவில்லை என்றால் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து அதை அடமானம் வைத்து கஞ்சா குடிக்கின்ற அளவிற்கு கலாச்சாரம் வளர்ந்து என்பதுதான் இந்த திமுக ஆட்சியினுடைய சாதனையாக நினைத்துப் பார்க்க வைக்கின்றது.

நாடாளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்றத் தேர்தல் வேறு நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா,ராகுலா என போட்டியிட்டனர் ஆனால் சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினா எம்ஜிஆர்,ஜெயலலிதா வழியில் வந்த எடப்பாடி பழனிச்சாமியா என போட்டி’ தற்போதுள்ள நிலையில் தமிழக மக்கள் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரவேண்டும் என்றே நினைக்கின்றனர். வார்டு உறுப்பினர்கள், கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு கழகத்தில் எவ்வாறு நடந்து கொள்வது தேர்தல் விதிமுறைகளை பற்றியும் தேர்தல் நடத்தையைப் பற்றியும் வாக்காளரிடம் எவ்வாறு வாக்கு சேகரிப்பது போன்ற ஆலோசனை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதில் அதிமுக நகர கழக செயலாளர் வெள்ளியங்கிரி , தொகுதி செயலாளர்
டி. கே.சுப்பிரமணி, நகரத் துணைச் செயலாளர் ஜெய்கணேஷ், நகர மன்ற உறுப்பினர்கள், நகர செயலாளர்கள், ஐடி விங் நிர்வாகிகள், கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
