• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

90’களின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற ஆட்டோ பிரச்சாரம்….

ByNamakkal Anjaneyar

Apr 1, 2024

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுபவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாதேஸ்வரன் அவருக்கு ஆதரவு கேட்டு திருச்செங்கோடு பேருந்து நிலையம் நான்குரத வீதி பகுதிகளில் திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது தொண்ணூறுகளின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் 90களில் ஆட்டோவில் ஆடியோ செட்டு வைத்து பிரச்சாரம் செய்தது போல் ஆட்டோக்கள் பின் தொடர்ந்து வர, நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுவின் கணவர் சுரேஷ்பாபு ஆட்டோ ஓட்ட நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆட்டோவின் முன் அமர்ந்து வந்து திருச்செங்கோடு நகர பகுதிகளில் உள்ள மக்களிடம் திமுக கூட்டணிக்கு வாக்குகளை சேகரித்தனர் பேருந்துகளில் செல்லும் மக்களிடமும் ஓட்டுநர்கள், பூக்கடை, டீக்கடை, டூரிஸ்ட் வாகன ஓட்டுனர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் திமுகவினர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் சேர்ந்து கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரனுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தனர்…. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் வகையில் அமைந்த இந்த ஆட்டோ பிரச்சாரம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.