• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம்

Byகுமார்

Jan 17, 2025

அனுபவி ராஜா அனுபவி என்று அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்தார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை கே.கே. நகர் சந்திப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்..,

2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அமையும். அனுபவி ராஜா அனுபவி இருக்கும்போதே அனுபவி என ஆட்சியில் இருக்கும் போதே அனைத்தையும் அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம். மக்கள் வறுமையிலும், வறட்சியிலும் இருந்த போது தள்ளாத வயதில் மானாட மயிலாட பார்த்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று சைக்கிள் ஓட்டி விளம்பரம் செய்கிறார்.


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு தனது மகனோடு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பெண் அதிகாரி மாவட்ட ஆட்சியரான ஒருவரை இருக்கையில் இருந்து எழ வைத்திருக்கிறார். இந்த ஆட்சியில் அதிகாரிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

உலகத் தமிழ் மாநாடு திமுக நடத்திய போது உலகத்திலிருந்து வந்த அறிஞர்கள் எல்லாம் கீழே அமர வைக்கப்பட்டார்கள் கலைஞர் குடும்பம் மட்டும் மேடையில் அமர வைக்கப்பட்டார்கள். அனுபவிக்கிறார்கள் அனுபவிக்கட்டும் இன்னும் ஒரு வருடம் தான். அதற்கடுத்து மக்கள் இவர்களை எங்கே வைப்பார்கள் என்று தெரியாது. எம்ஜிஆரை யாரும் வென்றது கிடையாது கடவுளை யாரும் கண்டது கிடையாது.