கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் Art Street பொதுமக்கள் மத்தியிலும், குழந்தைகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக Art Street எனப்படும் கலை தெரு நிகழ்வு இன்றும், நாளையும் கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

சுமார் 30க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு ஓவியர்கள் கலைஞர்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி Face Painting, Clay Art, Miniature போன்ற பல்வேறு செயல்முறைகளும் நடைபெறுகின்றன.
இங்கு ஆற்றுப்படுகைகளில் கிடைக்கும் கற்களைக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்களும் ஸ்கார்ப் பல்கலைக் கொண்டு செய்யப்பட்ட துப்பாக்கி, தேன் நத்தை இசைக்கருவிகள் வாகனங்கள் ஆகியவை பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த Art Street நிகழ்ச்சியில் குழந்தைகள் அவர்களாகவே மேற்கொள்ளும் பல்வேறு செயல்முறைகளும் இடம் பெற்றுள்ளன.








