• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஐஸ்கிரீம் விற்று மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் நடிகர்..!

Byவிஷா

May 22, 2023

நடிகர் ஒருவர் படவாய்ப்புகள் இல்லாததால் ஐஸ்கிரீம் விற்று மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் ப்ரண்ட்ஸ் படம் மற்றும் விஜயகாந்தின் வானத்தைப்போல உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பரத் ஜெயந்த். அவர் ஷகலக பூம் பூம் தொடரிலும் நடித்து இருக்கிறார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தாலும் வளர்ந்த பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் பீச்சில் ஐஸ்கிரீம் விற்று வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவருக்கு, வளர்ந்தபின் சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது ஐஸ்கிரீம் விற்று மாதம் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.