கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ பிடாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியில் அருள் பாலித்து வரும் அருள்மிகு பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் இருந்து உற்சவர் விழாவில் மலர் அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார்.
வழி நெடுகிலும் பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொரு வீட்டுக்கு வழியாக செல்லும் பொழுது தேங்காய் பழங்கள் உடைத்து சூடம் ஏந்தி மிகச் சிறப்பாக வழிபட்டனர்.
பின்பு சுவாமி குங்குமம் திருநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.