பாஜ க தமிழக தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு 8:30 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வருகிறார்.
மதுரை சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். 8.06.25 அன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ஒத்தக்கடைகளின் நடைபெறும் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

மத்திய வல்துறை அமைச்சர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் மதுரை வரும் அமித்ஷாவிற்கு பாதுகாப்பு வழங்க மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் போலீஸாரால் தீவிர தணிக்கை செய்யப்படுகிறது . மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை செய்யபடுகிறது.
வெடிகுண்டு தடுப்பு போலீஸார் மூலம் விமான நிலையம் முழுவதும் தீவிர கண்காணிப்பு சோதனை நடைபெறுகிறது.