வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலின்படி தீபாவளி முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை. திண்டுக்கல் மாவட்டத்தில் 36 ஆம்புலன்ஸ்களும் ஒரு இரு சக்கர வாகன ஆம்புலன்ஸும் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் உள்ளது.

அழைப்பு கிடைத்த ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் சேவை அளிக்கப்படும். மாவட்டத்தில் 108 என்ற அவசர எண் காவல்துறை மருத்துவம் மற்றும் தீயணைப்பு துறை ஆகிய அனைத்து அவசர சேவைக்குமான எண்ணாக மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
பொதுவாக 108 ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்களில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மக்களுக்கு சேவை வழங்கும். ஆனால் தீபாவளிக்காக மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களில் ஆம்புலன்ஸ்கள் விரைந்து செயல்படுவதற்கு நிறுத்தப்பட்டிருக்கும்.

வருகின்ற 19 20 21 ஆகிய மூன்று நாட்கள் அதிக அவசர அழைப்புகள் வரும் என்பதை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்றவாறு மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் அனைத்து 108 ஆம்புலன்ஸ்களிலும் தேவைக்கேற்ப உள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது தீக்காயங்கள் சம்பந்தமாக அதிகமான அழைப்புகள் வரும் என்பதால் அனைத்து 108 ஆம்புலன்ஸ்களிலும் பான்ஸ் கிட் வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அவசர உதவி தேவைப்படுபவர்களின் இருப்பிடத்தை சரியாக கண்டறிவதற்கு அவசரம் 108 தமிழ்நாடு என்ற செயலியை ப்ளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த செயலையானது இரவில் பயணம் செய்பவருக்கு மேலும் நீண்ட தூரம் வேறு மாவட்டத்தில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருப்பவர்களுக்கு உதவியாக உள்ளது.

இந்த செயலி மூலம் 108 தொடர்பு கொள்ளும் பொழுது உங்களது இருப்பிடத்தை கூற வேண்டிய அவசியம் இருக்காது மேலும் ஜிபிஎஸ் கருவி மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிந்து அருகில் உள்ள 108 ஆம்புலன்சை அனுப்பி வைக்க ஏதுவாக இருக்கும்.