அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க பேரவை சார்பில் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு மக்கள் தேச அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க பேரவை சார்பாக டாக்டர் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

நிறுவனர் சேரன் யாக்கோபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில மண்டல கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் காண 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை அரசு காலதாமதம் படுத்தாமல் உடனே பேசி தீர்க்க வேண்டும்.

தொழிலாளருக்கு வழங்க வேண்டிய பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். காலி பணியிடங்களுக்கு தனியார் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
