புதுச்சேரி ஊசுடு தொகுதியில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து இடங்களில் அம்பேத்கர் சிலை புணரமைக்கப்படும் பணியினை அமைச்சர் சாய் சரணகுமார் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குட்பட்ட கரசூர், தொண்டமாநத்தம், துத்திப்பட்டு, கூடப்பாக்கம் சேந்த நத்தம் ஆகிய கிராமங்களில் தற்போழுது உள்ள அம்பேத்கரின் ஐந்து சிலைகள் புதுப்பிக்கப்பட இருக்கிறது. நிழற்குடை, படிக்கட்டு, மின்விளக்கு ஆகிய வசதிகளுடன் இவை புதுப்பிக்கப்பட இருக்கின்றன.
இதற்கான பூமி பூஜையை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான சாய். சரவணகுமார் துவக்கி வைத்தார்.
அமைச்சரே சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதி படைத்து பூமிபூஜை செய்து வைத்தார்.
மூன்று மாதங்களில் இப்பணி முடிந்து மத்திய அமைச்சரை வைத்து ஐந்து சிலைகளும் திறக்கப்படும் என அப்போது அமைச்சர் தெரிவித்தார்.
