விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் கடந்த ஜூன் 18ம் தேதி முதல் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

அகழாய்வில் தொன்மையான மனிதர்களின் நவநாகரீக வாழ்க்கை முறையையும், கடல்வழி வாணிபங்களில் ஈடுபட்டதற்கான சான்றுகளாக பல்வேறு தங்க மணி, சங்கு வளையல்கள், செப்பு காசுகள், சுடுமண் முத்திரை, அகேட் வகை மணிகள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடந்த அகழாய்வில் 13 சென்டிமீட்டர் ஆழத்தில் 29.5 மில்லி மீட்டர் நீளமும், 6.6 மில்லி மீட்டர் சுற்றளவும், 2.64 மில்லி கிராம் எடையும் கொண்ட செம்பினால் செய்யப்பட்ட “அஞ்சன கோல்” கிடைக்கப்பெற்றுள்ளது.