• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வசூலில் தூள் கிளப்பும் அமரன்

Byவிஷா

Nov 4, 2024

இயக்குநர் இராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று 3 நாளில் 100கோடிக்கும் மேல் வசூலாகி தூள் கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் வசூல் சாதனையும் புரிந்து வருகிறது. இந்நிலையில் அமரன் திரைப்படம் 3 நாட்களில் மட்டும் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் இன்னும் வருகிற நாட்களில் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.