• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் அம மு க கொடிக்கம்பம் மற்றும் பீடம் தகர்ப்பு போலீசார் விசாரணை:

ByN.Ravi

Mar 2, 2024

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் சூழலில், அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் தேர்வு மற்றும் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் தொகுதியில்
வருகின்ற 6ஆம் தேதி புதன்கிழமை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்
செயலாளர் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் , சோழவந்தான் மற்றும் அலங்காநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில், கட்சியினர் சோழவந்தான் அலங்காநல்லூர் பகுதிகளில், கொடியேற்றுவதற்காக கொடி கம்பம் நடும் பணியினை செய்து வருகின்றனர். சோழவந்தான் பேரூர் கழகம் சார்பாக, பேரூர் செயலாளர் திரவியம் ஏற்பாட்டில், ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அனைத்து கட்சிகளும் இருக்கும் கொடி கம்பங்களுக்கு மத்தியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியினை ஏற்றி வைப்பதற்கான பணிகளை செய்து வந்தனர். இதற்கான கொடிமரத்தனையும் கொடி மரத்திற்கான பீடம் அமைக்கும் பணி யினையும் செய்திருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் கொடி கம்பத்தினை அகற்றியும் பீடத்தினை சேதப்படுத்தியும் சென்று விட்டனர். இதனை அறிந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மாவட்டத் துணைச் செயலாளர் வீரமாரி பாண்டி யன்,
ஒன்றிய செயலாளர் ராஜன், பேரூர் செயலாளர் திரவியம், பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன், நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், சுந்தர் ரபீக், ரஜினி பிரபு, முனைவர் பாலு மற்றும் தொண்டர்கள் அந்த இடத்தில் திரண்டனர். இது குறித்து, காவல்
துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் காவல்துறையினர் வந்து கொடிமரத்தினை அகற்றி சென்றவர்கள் மற்றும் பீடத்தினை சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூறுகையில்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியை பிடிக்காத சில விஷமிகள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, காவல்
துறையில் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டுபிடிப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதுகுறித்து, கழகப் பொதுச் செயலாளர் மண்டலத் தலைவர் டேவிட் அண்ணாதுரை மற்றும் மாவட்டச் செயலாளர் மேலூர் சரவணன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.