திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2012 முதல் 2015 வரை கணினி அறிவியல், கணிதம், அறிவியல் மற்றும் கலை பாடங்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் 10 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்து தங்களது வாழ்க்கை குறித்தும், தங்களது அனுபவங்களை குறித்தும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

அதன்பின் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் வெகு மகிழ்ச்சியாக தங்களுடைய பழைய நினைவுகளை, நடந்த சம்பவங்களை அப்போதிருந்த ஆசிரியர்களை பற்றி மகிழ்வாக பேசி கொண்டாடினர். அதன் பின் அனைவரும் அறுசுவை மதிய உணவு அருந்தி சென்றனர். இது பற்றி அங்கு வந்திருந்த முன்னாள் மாணவர்கள் தெரிவிக்கும் போது நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் பணியாற்றுகிறோம்.

10 ஆண்டுகளுக்குப் பின்பு நாங்கள் குடும்பத்துடன் சந்தித்துக் கொண்டது எங்களுடைய மனதுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை அளிக்கிறது. நாங்கள் அனைவரும் இணைந்து பள்ளிக்கு சிசிடிவி கேமரா வழங்க உள்ளோம், இதே போல் ஒவ்வொரு ஆண்டும் படித்த மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு குடும்பத்தினருடன் சந்தித்து நாம் படித்த பள்ளிக்கு ஏதாவது ஒன்று ஞாபகாரத்திற்காக செய்தால் அந்த பள்ளிக்கும் வளர்ச்சியாக இருக்கும் படித்த அவர்களுக்கும் மன மகிழ்வாக இருக்கும் என்று தெரிவித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)