அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் 06 புதிய BS VI நகரப்பேருந்து சேவை துவக்க விழாவின்போது, ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம், கூவத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த ( கூவத்தூர் (மேற்கு), கே.என்.குப்பம், அகினேஸ் புரம் )50-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், அக்கட்சிகளிலிருந்து விலகி, மாவட்ட திமுக செயலாளர், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்,
தலைமையில் திமுக இணைந்தனர்.

அதனைத் தொடர்ந்து கட்சியில் இணைந்த அனை வரையும், மாவட்ட திமுக செய லாளர் சா.சி .சிவசங்கர் திமுக கட்சி சால்வை அணிவித்து வரவே ற்றார்.இந்நிகழ்வில்,ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.கலியபெருமாள், ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ரெங்க.முருகன், ஆண்டிமடம்மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் இரா. செந்தில்குமார், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.









