• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்..,

ByK Kaliraj

Mar 10, 2026

விருதுநகர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 50 ற்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் …

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் சட்டடமன்றத்தொகுதியை சார்ந்த ஓபிஎஸ் அணி மற்றும் மாற்றுக்கட்சியினர் என சுமார் 50ற்க்கும் மேற்பட்டோர் திருத்தங்களில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து ராஜேந்திரபாலாஜி வாழ்த்து தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் S.R.விஜயகுமரன் செய்திருந்தார்.