அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகள், மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
அதன்படி, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறை, அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதி ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக மொத்தம் ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டங்களுக்கு 85சதவீத நிதியை நபார்டு வங்கியும், 15சதவீத நிதியை மாநில அரசும் பங்களிப்பாக வழங்கும்.
அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 440 பள்ளிகளில் 3,032 வகுப்பறைகள் ரூ. 714 கோடி செலவில் கட்டப்பட உள்ளன என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
