• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சாதி ,மதக்கலவரத்தை துண்டுவதாக -கரகாட்டக் கலைஞர் மீது குற்றச்சாட்டு

Byp Kumar

Apr 13, 2023

கரகாட்ட கலையை சீர்குலைக்கும் விதமாக தலையில் சமுதாயக் கொடிகளை தலையில் கட்டி மதவாதத்தையும் சாதி கலவரத்தையும் தூண்டுவதாக கரகாட்டக் கலைஞர் பரமேஸ்வரி மீது குற்றச்சாட்டு


மதுரை திருமங்கலத்தைச் பகுதியை சேர்ந்த கரகாட்டக் கலைஞர் பரமேஸ்வரி என்பவர் கிராம கலை பாரம்பரியத்திற்குரிய கரகாட்ட கலையை சீர்குலைக்கும் விதமாக திருவிழா போன்ற நிகழ்வுகளில் சமுதாயக் கொடிகளை தலையில் கட்டி மதவாதத்தையும் சாதி கலவரத்தையும் தூண்டுவதாக செயல்படுவதாக சக கரகாட்ட கலைஞர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் மேலும் இவர் சமீபகாலமாக சுயநலத்திற்காக கரகாட்டம் ஆடும் ஊர்களில் நையாண்டி மேளக்காரர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் விதமாகவும் கலைஞர்களை ஓரங்கட்டி விட்டு இரவில் நடக்கும் கரகாட்டத்தில் சினிமா பாடல்களை போட்டு விட்டு இவரும் இவர் கூட யார் ஆட போனாலும் நீங்களும் நான் சொல்றது மாதிரி தான் ஆட வேண்டும் அப்பொழுது தான் எனக்கு நிறைய விளம்பரங்கள் கிடைக்கும் என்றும் மிரட்டி வருவதாக தெரிவித்தனர்.
மேலும் கரகாட்டக் கலைஞர் பரமேஸ்வரியை வைத்து மண்ணின் மைந்தர்கள் பட்டாம்பூச்சி யூடிப்,சேனல்கள் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவித்தனர் மேலும் பரமேஸ்வரி என்பவர் பெயரில் கரகாட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக 356 யூட்யூப் சேனல்கள் செயல்பட்டு வருகிறது இந்த யூட்யூப் சேனல்கள் அனைத்தும் கரகாட்ட கலையை இழிவுபடுத்தும் விதமாகவும் மேலும் கலையை முடக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.மேலும் பாரம்பரிய கலையான கரகாட்ட கலையை முடக்கும் விதமாக செயல்பட்டு வரும் அனைத்து youtube சேனல்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என அகில இந்திய கலைக் குடும்பங்கள் சார்பாக வலியுறுத்தப்பட்டது