திமுக,அதிமுக இரண்டு கட்சியும் நாசக்கார திட்டத்திற்கு மத்திய அரசுடன் கூட்டணி வைத்துள்ளது. மக்களை திசை திருப்பி அவர்களின் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள், இவர்களுக்கு தேவை எல்லாமே கமிஷன் தான், அவர்களுக்கு இயற்கையும், இயற்கை வளங்களை காப்பாற்றுவது பற்றி எந்த எண்ணமும் கிடையாது. இவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் எண்ணமும் கிடையாது. அதைப்பற்றி பேசும் ஒரேகட்சி நாம் தமிழர் கட்சி. அதனால் தான் இன்று கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் இருந்து அரிய வகை மணல் ஆலைக்கு, கடல் மண்ணிலிருந்து கனிம வளங்களை பிரித்தெடுக்கும் அனுமதி வழங்கிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது, வரும் கருத்து கேட்டு கூட்டத்தில் ஒன்றினைத்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி, இதில் ஜஸ்டின் பெனிடிக்ட் ராஜ் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ஜெயன்றீன் நாகர்கோவில் மாவட்ட தலைவர் கலையரசன், நாகர்கோவில் மாவட்ட பொறுப்பாளர், தீபக் சாலமன், கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.








