அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தினர், 14 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர் ராஜகோபால் தலைமை வகித்தார்.சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி மணிமொழி ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் என் ராசேந்திரன், எம் பாலுசாமி, கே. சபாநாயகர் மாவட்ட பொருளாளர் எஸ் சிவாஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் கபிலன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் என் கோபு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசு ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறையை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுக்கும் , உதவி பொறியாளர்களுக்கும் இணையான ஊதியவு விகிதம் அனுமதித்து உடனே அரசு ஆணை வெளியிட வேண்டும், ஊராட்சி செயலாளர்கள் பணி காலத்தில் 50% ஓய்வூதிய பயன்கள் கணக்கிட ஏதுவாக பொதுவான அரசாணை வெளியிட வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அனுமதித்திட அரசு ஆணை வெளியிட வேண்டும் பொருத்துநர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணிக்காலத்தை சேர்த்து கணக்கிட்டு பத்தாண்டு முடிவு பெறும் நாளில் தேர்வு நிலை அந்தஸ்து வழங்கிட வேண்டும்.
அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பணி ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பிடிப்பின்றி மருத்துவ காப்பீடு அடையாள அட்டை உடனே வழங்கிட வேண்டும் ஊராட்சி ஒன்றிய பணி ஓய்வூதிய ர்கள் வைப்பு தொகைக்கான வட்டி தொகை தாமதம் இன்றி அனும தித்து விரைவில் வழங்கிட வேண்டும், அரசுத்துறை ஓய்வூதியர்கள் தொடர்பான தகவல்களை அறிய ஏதுவாக களஞ்சியம் செயலி உள்ளதை போல் ஊராட்சி ஒன்றிய பணி ஓய்வூதியதாரர்களுக்கும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை இயக்ககம் சார்பில் தனி செயல் ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் ஆர். ராமசாமி தமிழ்நாடு ஊர வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் தி கணேசன், ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர். முருகேசன்,துணைத் தலைவர் டி எம் கணேசன் முன்னாள் அலுவலக உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம் பெரிய சாமி,ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகி இராஜேந்திரன், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் து வேலுசாமி,
சங்கத்தின் மாவட்ட செயலாளர் என். ராஜமோகன்,மாவட்ட தணிக் கையாளர் கே சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




