• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அசரத் சுல்தான் சிக்கந்தர்பள்ளிவாசலில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்

ByKalamegam Viswanathan

Nov 18, 2024

திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் அசரத் சுல்தான் சிக்கந்தர் பாதுகாப்பு பள்ளிவாசலில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான மலை மேல் காசி விசுவநாதர் கோவில் சிக்கந்தர் பாதுஷா மலை பள்ளிவாசல் உள்ளது இரண்டு சமூகத்தினரும் ஒருங்கே இணைந்து செயல்பட்டு வரும் வேளையில் கடந்த 16ஆம் தேதி இரவு சமூக விரோதிகள் சிலர் மலைமேல் உள்ள கார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்றியுள்ளனர்.

இது தொடர்பாக youtube மட்டும் வலைதளங்களில் செய்தி பரவியது எடுத்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது அதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம்கோவில் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து முதல் கட்டமாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது தொடர்ந்து அஸ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுகாப்பு பள்ளிவாசலில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது இதில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் முன்னேற்ற கழம், நாம் தமிழகம், எஸ்டிபிஐ, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

மலைமேல் தீபம் ஏற்றப்பட்டதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறையினர் பணியின் போது அஜாக்கிரதையாக இருந்ததனால் தான் இத்தகைய சம்பவம் நடந்தது கூடுதல் போலீசாரை பாதுகாப்புக்கு அமர்த்தவும்.

போலீசாருடன் பொதுமக்கள் (இஸ்லாமிய) கார்த்திகை முடியும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.