மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் வலையங்குளம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் உங்களுடன் ஸ்டாலின் அனைத்து துறை பொதுமக்களின் குறைவு தீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் மகளிர் உரிமைத் தொகை, ஆதார் சேவை, முதலமைச்சர் மருத்துவ காப்பீடு, பட்டா மாறுதல், சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது .
இதில் 1400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் சுமார் 800-க்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்தனர்.
திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் மணி வலையன்குளம் ஊராட்சி செயலாளர் செந்தில் வேல் முருகன் ஒன்றிய கவுன்சிலர் அழகுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்