கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையை கட்டிய பொறியாளர் அலெக்ஸாண்டர் மிஞ்சின் அவர்களின் 157 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அதில் பாசனத்துறை தலைவர் சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ, பிபி சேனல் தலைவர் முருகேச பிள்ளை, தோவளை பிரதான கால்வாய் தலைவர் தாணு பிள்ளை, மற்றும் விவசாய சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏசுதாஸ், கருணாநிதி, பிரபு, ஜெனில் சிங் , டோனி பெலிக்ஸ், மற்றும் நிர்வாகிகள், மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் அரசியல் கட்சி சார்பாக அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் சுதர்சன் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.