• Fri. Jan 24th, 2025

குடிபோதை தடுப்பு சிகிச்சை மையம் தொடக்கம்

ByN.Ravi

Mar 9, 2024

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின், மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் புதியதாக குடி மற்றும் போதை சிகிச்சை பிரிவினை, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் இன்று திறந்து வைத்தார். உடன், காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பாபுஜி, காரியாபட்டி மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரன், காரியாபட்டி சார்பு ஆய்வாளர் பா. அசோக்குமார், காரியாபட்டி எஸ்.பி.எம் டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், மருத்துவர்கள் சின்னக்கருப்பன்,ஜெயந்தி, நிஷாந்த், விது பிரபா, செவிலியர் கண்காணிப்பாளர் வாசுகி, செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.