• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : வாடிவாசல் உள்பகுதியில் சுவர் எழுப்பியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு..!

ByKalamegam Viswanathan

Jan 12, 2024

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் உள்பகுதியில் சுவர் எழுப்பியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டை மடைமாற்றும் முயற்சியாக அருகில் உள்ள கீழக்கரை பகுதியில் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் ஏற்படுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு அங்கு நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, அடுத்த ஆண்டு கீழக்கரையில் நடைபெறும் என்று அரசு பின் வாங்கியது. இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை சீர்குலைக்கும் முயற்சியாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலின் உள்பகுதியில் இரு பக்கமும் சுவர் எழுப்பி அகலமான ஜல்லிக்கட்டு மாடுகள் வருவதற்கு வழியில்லாமல் செய்யும் முயற்சியாகவும் ஜல்லிக்கட்டின் விறுவிறுப்பை குறைக்கும் முயற்சியாகவும் அமைச்சர் உத்தரவின் பேரில் சுவர் எழுப்பியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்
இந்த நிலையில் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளை பார்வையிட இன்று அமைச்சர் மூர்த்தி வருகை தந்த நிலையில் அலங்காநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் வாடிவாசல் முன்பு குவிந்தனர் அப்போது அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காலங்காலமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின் விறுவிறுப்பை குறைக்கும் முயற்சியாக வாடிவாசல் உள்பகுதியில் சுவர் எழுப்பி யதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுவரை உடனே அகற்றாவிட்டால் பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு விழாவானது தற்போது பெரிய விவாதப் பொருளாக மாறி உள்ளது பொதுமக்களிடையே மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆகையால் இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்..